சென்னையில் காலை முதலே பரவலாக மழை
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.


சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக லேசானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த ஒரு சில வாரங்களாகவே, அதிகாலையில் லேசான தூறல் முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் பெய்யத் தொடங்கிய மழை விட்டு விட்டு பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது.
சென்னையில் அம்பத்தூர், தாம்பரம், வடபழனி, வில்லிவாக்கம், ஆவடி, நீலாங்கரை, கோவிலம்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் எகிறும் மின் கட்டணம்; குவியும் புகார்கள்
மேலும், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், இன்று காலை 8 மணி நிலவரப்படி அடுத்த 2 மணி நேரத்தில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...