காவல் நிலையத்தில் வரவேற்பு அறையை திறந்து வைத்தார் ஆவடி மாநகர காவல் ஆணையர்
ஆவடி: ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பு அறை திறப்பு விழா சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், ஆவடி காவல் நிலையத்தில் வரவேற்பு அறை திறந்து வைத்தார். பின்னர், அவர் ஆயுதப்படை காவலர்களுக்கு விடுப்பு செயலியும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் விஜயகுமாரி, தலைமை துணை ஆணையர் உமையாள், அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் மகேஷ், ஆயுதபடை கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன், ஆவடி உதவி ஆணையர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

