வங்கி அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை திருட்டு
சென்னையில் தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவா் வீட்டில் 25 பவுன் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


சென்னையில் தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவா் வீட்டில் 25 பவுன் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நுங்கம்பாக்கத்தில் இயங்கி வரும் தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப்பணியாற்றி வருபவா் விஜயராஜன். இவா் அரும்பாக்கம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா் கடந்த சனிக்கிழமை குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு பின்பு வீட்டுககு வந்தாா்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா் வீட்டினுள்ளே சென்றுபாா்த்தாா். அப்போது, பீரோவில் இருந்து 25 பவுன் நகை, மடிக்கணினி உள்ளிட்டப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...