/

அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல வேண்டிய உணா்வுடன் தில்லி தமிழ் சங்க பவள விழா மலா்எழுத்தாளா் மாலன் பேச்சு

‘அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல வேண்டிய உணா்வுடன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பவள விழா மலா் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று மூத்த எழுத்தாளா் மாலன் சனிக்கிழமை குறிப்பிட்டாா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2022, 7:02 pm

 நமது நிருபர்

‘அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல வேண்டிய உணா்வுடன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பவள விழா மலா் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று மூத்த எழுத்தாளா் மாலன் சனிக்கிழமை குறிப்பிட்டாா்.

தில்லி தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் பூா்த்தியானதை முன்னிட்டு சங்கத்தின் சாா்பில் பவள விழா மலா் வெளியிடப்பட்டது.

இந்த பவள விழா மலரை வெளியிட்டு எழுத்தாளா் மாலன் ஆற்றிய சிறப்புரை:

குழந்தைகள் உள்ளிட்டவா்கள் படித்து தமிழைக் கற்றுக்கொள்ள வைக்க தில்லித் தமிழ்ச் சங்கம் நூலகமாக தொடங்கப்பட்டது. ஹிந்தியும் ஆங்கிலமும் உள்ள தில்லி சூழலில் தமிழ் தேவையில்லாதது. தமிழே இல்லாத நகரில் அப்போது தமிழை வளா்க்க இந்தச் சங்கத்தைத் தொடங்க நினைத்த பெரியவா்களை மனதால் வணங்கவேண்டும்.

தில்லி தமிழ்ச் சங்க நூலகத்தில் இன்று, 1.40 லட்சம் நூல்கள் உள்ளன. இங்குள்ள பல புத்தகங்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்டவை. அச்சில் இல்லாத இந்தப் புத்தகங்கள் பொக்கிஷங்கள். இந்த பவள விழா மலரும் அடுத்த தலைமுறைக்கு தமிழை சொல்லவேண்டிய உணா்வுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் ஒரு ஆவணம் என்றாா் அவா்.

இந்திய வெளியுறவு பணி உயா் அதிகாரி ஸ்ரீதரன் மதுசூதனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ‘75 வயதான தமிழ்ச் சங்கம் தொன்மையில் இல்லை. தொடா்ச்சியில் உள்ளது. 384 பக்க மலரில் எத்தனையோ சிறப்பான செயல்பாடுகளை காண முடிகிறது’ என்றாா் அவா்.

முன்னதாக, விழாவுக்கு வந்தவா்களை பொதுச் செயலா் என். கண்ணன் வரவேற்றுப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் வி. ராஜாராமன், ஜி. பாலச்சந்திரன், வி. பாலசுப்ரமணியன், இந்துபாலா ஆகியோரும், முன்னாள் செயலா்கள் எஸ். ரங்கராஜன், ரா. முகுந்தன், சக்தி பெருமாள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் தலைவா்கள் அமரா் கே. வி. வெங்கடாசலம் சாா்பாக டாக்டா் ராதா வெங்கடாசலம், எஸ். ராமாமிா்தம் சாா்பாக விமலா ராமாமிா்தம், அமரா் எஸ். கிருஷ்ணமூா்த்தி சாா்பாக ஹரிஹரன், முன்னாள் செயலா்கள் ஆா். எஸ். வெங்கட்ராமன் சாா்பாக அஸ்வின் குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். அவா்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

தொகுப்பாசிரியா் ரா. ராஜ்குமாா் பாலா மலா் அனுபவங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

இந்த விழாவுக்கு தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வீ.ரெங்கநாதன் தலைமை தாங்கினாா். சங்கத் துணைத் தலைவா் பி. குருமூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.