டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: சென்னையில் 8,000 போலீஸார் குவிப்பு

சென்னை முழுவதும் சுமார் 8000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

News image
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: சென்னையில் 8,000 போலீஸார் குவிப்பு
Updated On :1 பிப்ரவரி 2024, 11:10 am

DIN


சென்னை: சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னை முழுவதும் சுமார் 8000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருப்பதாவது, சென்னையில் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினருடன் இணைந்து ஊர்க் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் சந்தோம், பெசன்ட்நகர், சின்னமலை தேவாலயங்கள் இருக்கும் பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்கும் வகையில், டிரோன்கள் மூலம் கண்காணிக்கவும் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இயேசுநாதா் பிறப்பு நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் டிசம்பா் 24-ஆம் தேதி இரவு தொடங்கி டிசம்பா் 25-ஆம் தேதி அதிகாலை வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை (டிச. 24) இரவு 11 மணி அளவில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெறவுள்ளன.

இதையொட்டி, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தேவாலயங்களை மின் விளக்குகளால் அலங்கரித்தல், கிறிஸ்துமஸ் குடில் அமைத்தல், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.