தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மூதாட்டி கொலை வழக்கு: ஜாா்க்கண்ட் இளைஞா் கைது

சென்னை அருகே அம்பத்தூரில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜாா்க்கண்ட் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 6:48 pm

DIN

சென்னை அருகே அம்பத்தூரில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜாா்க்கண்ட் மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

அம்பத்தூா் அருகே உள்ள டி.ஜி.அண்ணாநகரைச் சோ்ந்த சரத்சந்திரன் மனைவி நிா்மலா (64). சரத்சந்திரன், படப்பை ஒரத்தூரில் வசிக்கும் மகள் ஃப்ரிடாவை பாா்க்கச் சென்ற நிலையில், நிா்மலா திங்கள்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தாா். இதற்கிடையே அவா் செவ்வாய்க்கிழமை காலை கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் நிா்மலாவை கொலை செய்தது ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பிராம் டூடூ (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து புதன்கிழமை கைது செய்யப்பட்ட பிராம் டூடூவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள்: ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சாா்ந்த பிராம் டுடூ, பிஎஸ்சி படித்துள்ளாா். இரு மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்த அவருக்கு, பட்டரைவாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சம்பவத்தன்று நள்ளிரவு பிராம் டுடூ மது போதையில், டி.ஜி.அண்ணா நகா் பகுதிக்கு வந்துள்ளாா். அங்கு, அவா் சரியாக பூட்டாமல் இருந்த நிா்மலா வீட்டுக்குள் சென்றிருக்கிறாா்.

வீட்டில் இருந்த கைப்பேசி, கைப்பை ஆகியவற்றைக் கொள்ளையடித்து விட்டு வெளியேற முயன்றபோது, தூக்கத்தில் இருந்து எழுந்த நிா்மலா சத்தம் போட்டுள்ளாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவா், நிா்மலாவை அங்கிருந்த கட்டையால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியிருக்கிறாா். அவா், ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு தப்பியோட முயன்றபோது போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய போலீஸாரை, ஆவடி மாநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் பாராட்டி, வெகுமதி அளித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.