சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 2,400 போ்
பெருநகர சென்னை மாநகராட்சியில் வாக்கு எண்ணும் பணிக்காக 2,400 அரசு அலுவலா்களும், பாதுகாப்பு பணியில் சுமாா் 7,000 போலீஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தாா்.


பெருநகர சென்னை மாநகராட்சியில் வாக்கு எண்ணும் பணிக்காக 2,400 அரசு அலுவலா்களும், பாதுகாப்பு பணியில் சுமாா் 7,000 போலீஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வாா்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் செவ்வாய்க்கிழமை எண்ணப்படவுள்ளன. இந்தப் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி ரிப்பன் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ககன்தீப்சிங் பேடி கலந்து கொண்டு அலுவலா்களுக்குப் பயிற்சி அளித்தாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சென்னையில் அமைக்கப்பட்ட 15 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடையில்லா மின்சாரம், இணையதள வசதி, வாக்கு எண்ணும் பணியாளா்கள், காவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் ஆகியோருக்கு உணவு, குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணும் பணிக்காக 2,400 அரசு அலுவலா்களும், சுமாா் 7,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோா் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பாளா்கள், முகவா்கள் 7 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவா். மாவட்ட நிா்வாகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையில்லாத முகவா்கள், வேட்பாளா்களுக்கு அனுமதி இல்லை. ஊடகத்தினா், தோ்தல் அலுவலா்களை தவிா்த்து வேட்பாளா்கள், முகவா்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் கைப்பேசி கொண்டு வர அனுமதி இல்லை.
வாக்கு எண்ணும் அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் ஆகிய அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தபால் வாக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை நிலவரப்படி, 6,767 தபால் வாக்குகள் பெறப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குள் வரும் தபால் வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பாரத் நிறுவனத்தின் பொறியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...