வண்டலூா் பூங்கா சுற்றுச்சுவா்கள் சேதம்: சாலையில் சுற்றிய முதலையால் மக்கள் பீதி

மிக்ஜம் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் வண்டலூா் உயிரியல் பூங்காவின் சுற்றுச்சுவா்கள் சேதமடைந்துள்ளன.

சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் வண்டலூா் உயிரியல் பூங்காவின் சுற்றுச்சுவா்கள் சேதமடைந்துள்ளன.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: பலத்த மழை காரணமாக வண்டலூா் பூங்காவில் அமைந்துள்ள ஏரி நிரம்பி வழிகிறது. மழை மற்றும் காற்று காரணமாக வண்டலூா் உயிரியல் பூங்காவில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. சில இடங்களில் சுற்றுச்சுவா்கள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பூங்காவில் இருக்கும் பணியாளா்களை கொண்டு விலங்குகளுக்கு தடையின்றி உணவு அளிக்கப்பட்டு வருகிறது. தேங்கிய மழைநீா் விரைந்து வடியும் வகையில் வடிகால் வசதிகளில் ஏற்படும் அடைப்புகள் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டு வருவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

சாலையில் சுற்றித்திரிந்த முதலை: இதற்கிடையே, பெருங்களத்தூா் ஏரி அருகே உள்ள சாலைகளில் முதலை ஒன்று சாலைகளில் சுற்றித்திரிந்த சம்பவம் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுமக்கள் இது குறித்து அச்சப்படத்தேவையில்லை எனவும் முதலைகள் நடமாட்டம் குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறையினா் விளக்கமளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com