கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கணவர் கொலை: மனைவிக்கு தண்டனை குறைப்பு
அப்பளம் பொரித்த கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கணவரைக் கொலை செய்த வழக்கில், மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


சென்னை: அப்பளம் பொரித்த கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கணவரைக் கொலை செய்த வழக்கில், மனைவிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளி ஆயிஷா தரப்பில் தாக்கல் செய்த மனுவில், தண்டனையைக் குறைத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல் குமார் உத்தரவு பிறப்பித்தார்.
பலியான அப்துல் ரஷீத், கொதிக்கும் எண்ணெய் ஊற்றப்பட்டு 28 நாள்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார். எனவே, அவர் பலியானதற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததும் கூட காரணமாக இருந்திருக்கலாம் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல், இந்த வழக்கில், பலியான நபரின் மருத்துவ அறிக்கை போதுமானதாக இல்லை, அவர் ஏன் பலியானார் என்பதற்கான மருத்துவக் காரணங்கள் சரவர கூறப்படவில்லை என்றும் உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று..
2012ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆயிஷா, கொதிக்கும் எண்ணெய்யை ரஷீத் மீது ஊற்றினார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.
இதையும் படிக்க.. 17 கிலோ தங்கம், 1.57 கோடி ரொக்கம்.. : அதிர்ச்சியில் சிபிஐ அதிகாரிகள்
இந்த வழக்கில், ஆயிஷாவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போதைய மேல்முறையீட்டின்போது, ஆயிஷா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், விசாரணை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த அனைவருமே பலியானவரின் உறவினர்கள், அது மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தை யாருமே நேரில் பார்க்கவில்லை என்று வாதிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...