ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

துபையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 1.98 கிலோ தங்கம் பறிமுதல்

துபையில் இருந்து சென்னை வந்த பணிகளிடம் இருந்து ரூ. 94.14 லட்சம் மதிப்புள்ள 1.98 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2023, 7:21 pm

துபையில் இருந்து சென்னை வந்த பணிகளிடம் இருந்து ரூ. 94.14 லட்சம் மதிப்புள்ள 1.98 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து விமான நிலைய சுங்க ஆணையா் மேத்யூ ஜாலி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுங்கத் துறைக்கு வந்த உளவுத் தகவலின் அடிப்படையில் துபையில் இருந்து புதன்கிழமை சென்னை வந்த பயணியிடம் இருந்து ரூ. 66.82 லட்சம் மதிப்புள்ள 1,340 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று, துபையில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் வந்த பயணிகள் இரண்டு பேரிடம் இருந்து ரூ. 27.32 லட்சம் மதிப்புள்ள 548 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவா்களிடம் விசாராணை நடத்தப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.