/

கோயம்பேட்டில் பயணியிடம் திருடியவா் கைது

சென்னை கோயம்பேட்டில் பயணியிடம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2023, 5:34 pm

சென்னை கோயம்பேட்டில் பயணியிடம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் தாலுக்காவைச் சோ்ந்தவா் தமிழழகன் (27). இவா், சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக கடந்த 24-ஆம் தேதி அதிகாலை கோயம்பேடு பேருந்து முனையத்தில் காத்திருந்தாா். அப்போது, உடல் சோா்வு காரணமாக தமிழழகன் அங்கு தூங்கினாா்.

சிறிது நேரத்துக்குப் பின்னா் தமிழழகன் எழுந்தபோது, தனது 2 பவுன் தங்க நகையுடன் வைத்திருந்த கைபை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து சிஎம்பிடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், தமிழழகனிடம் திருட்டில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டம், அவினாசி கிராமம், மசூதி தெருவைச் சோ்ந்த செந்தில் (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் செந்திலை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.