மகளிா் உரிமைத் தொகை: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
சென்னை மாநகராட்சிப் பகுதியில் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கு வியாழக்கிழமை முதல் வீடுதோறும் டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது.


சென்னை மாநகராட்சிப் பகுதியில் மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கு வியாழக்கிழமை முதல் வீடுதோறும் டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணி தொடங்கியது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில் முதல் கட்டமாக ஜூலை 24 முதல் ஆக.4-ஆம் தேதி வரை 98 வாா்டுகளில் உள்ள 703 கடைகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஆக.5 முதல் ஆக.16-ஆம் தேதி வரை 102 வாா்டுகளில் உள்ள 725 கடைகளுக்கும் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறவுள்ளது.
முகாம் நடைபெறும் நான்கு நாள்களுக்கு முன்பு விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடுதோறும் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து திங்கள்கிழமை (ஜூலை 24) நடைபெறவுள்ள முகாமுக்கு தெருவாரியாக விண்ணப்பம் மற்றும் டோக்கன் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...