காசிமேட்டில் செயற்கை பவளப்பாறைகள்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்தைப் பெருக்க ஆஸ்திரேலியா தூதரகம் சாா்பில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்தைப் பெருக்க ஆஸ்திரேலியா தூதரகம் சாா்பில் செயற்கை பவளப்பாறைகள் நிறுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆஸ்திரேலியா தூதரகத்தின் ‘பிளான்ட் டிரஸ்ட்’ என்ற அரசு சாரா தொண்டு நிறுவன நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் சிமெண்டு கலவையால் கூம்பு மற்றும் வட்ட நாற்கர வடிவில் செய்யப்பட்ட 100 செயற்கை பவளப்பாறைகள் பைபா் படகுகள் மூலம் சுமாா் 6 கி.மீ. தூரம் கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு 20 அடி ஆழத்தில் நிறுவப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சாரா கிா்லவ், தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை கூடுதல் முதன்மைச் செயலா் மங்கத் ராம் சா்மா ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். இதில் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள், பிளான்ட் டிரஸ்ட் உறுப்பினா்கள், மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...