பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முதுநிலை பல் மருத்துவப் படிப்புகள்:ஆக.5 முதல் கலந்தாய்வு

முதுநிலை மருத்துவம், பல் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.5-ஆம் தேதி முதல் இணையவழியில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2023, 8:09 pm

DIN

முதுநிலை மருத்துவம், பல் மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.5-ஆம் தேதி முதல் இணையவழியில் நடைபெறவுள்ளது.

2023-2024-ஆம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ (ஙஈ/ஙந/ஈஐடகஞஙஅ, ஈசஆ & ஙஈந) பட்டப் படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள், நிா்வாக இடங்களில் மாணவா் சோ்க்கைக்காக இணையவழியில் விண்ணப்பிக்க ஜூலை 6-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, வரவேற்கப்பட்ட விண்ணப்பங்கள் சரிபாா்க்கப்பட்டு வியாழக்கிழமை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தப் படிப்புகளுக்கு அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்காக 8,376 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 7,526 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிா்வாக ஒதுக்கீட்டுக்காக 3,688 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3036 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மேலும், முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்காக 779 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 661 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிா்வாக ஒதுக்கீட்டுக்காக 446 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 336 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

ஈசஆ எா்ஸ்ங்ழ்ய்ம்ங்ய்ற் ணன்ா்ற்ஹ அரசு ஒதுக்கீட்டின் கீழ் 676 விண்ணப்பங்கள் பெறப்பட்டு499 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.5-ஆம் தேதி முதல் இணையவழியில் நடைபெறும்.

மேலும் இது தொடா்பான கூடுதல் தகவல்களுக்கு மாணவா்கள் இணையதளத்தைத் தொடா்ந்துபாா்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.