குடிநீர் கட்டணம்: ஏப்.1 முதல் நுகர்வோர் அட்டை தரப்படாது என அறிவிப்பு!

சென்னையில் குடிநீர் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி செலுத்த ஏப்ரல் 1 முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் குடிநீர் கட்டணம், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி செலுத்த ஏப்ரல் 1 முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலித்துவதை டிஜிட்டல் கட்டண முறையில் ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருக்கும் நேரத்தைத் தவிர்க்க மற்றும் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும் ஏப்ரல் 1 முதல்  நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது.

மேலும், ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையில் எந்த பதிவும் செய்யப்பட மாட்டாது. நுகர்வோர்களுக்கு ஏப்ரல் 1 முதல் புதிதாக நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர்களுக்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் அட்டை சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்பட்ட வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com