ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டி: அமைச்சரை சந்தித்த வீரர்கள்!
இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த வீரர்கள் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.


பிலிப்பைன்ஸில் நடந்து முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான 22வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகளப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த வீரர்கள் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தைச் சேர்ந்த, 15 விளையாட்டு வீரர்கள் அடங்கிய குழு, அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இச்சந்திப்பில் சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத் தலைவர் எம்.செண்பகமூர்த்தி, அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ், மேகநாத ரெட்டி ஐஏஎஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...