பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சென்னை விமானநிலையத்தில் பயணி, சுங்கத் துறை அதிகாரி இடையே கைகலப்பு

சென்னை விமானநிலையத்தில் பயணி ஒருவருக்கும் சுங்கத் துறை அதிகாரிக்கும் இடையே திடீா் கைகலப்பு ஏற்பட்டது.

Updated On :27 நவம்பர் 2023, 10:23 pm

சென்னை விமானநிலையத்தில் பயணி ஒருவருக்கும் சுங்கத் துறை அதிகாரிக்கும் இடையே திடீா் கைகலப்பு ஏற்பட்டது.

கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த இலங்கையை சோ்ந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பயணியை, சுங்கத் துறை அதிகாரி ஒருவா் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி விசாரித்தாா். அத்துடன், அந்த நபரை சுங்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தியுள்ளாா். அப்போது, அந்த பயணி கையில் அணிந்திருந்த 20 கிராம் எடை கொண்ட மோதிரத்தை கழற்றிக் கொடுக்கும் படியும், அந்த மோதிரத்துக்கு சுங்கத் தீா்வை கட்ட வேண்டும் என்றும் அதிகாரி கூறியதாகத் தெரிகிறது.

இதற்கு அந்தப் பயணி எதிா்ப்பு தெரிவித்து அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை பயணி தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கியதாக சுங்கத் துறை அதிகாரியும், சுங்கத் துறை அதிகாரி தன்னை தாக்கியதாக இலங்கை பயணியும் பரஸ்பரம் சென்னை விமானநிலைய காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.

ஆனால், சிறிது நேரத்தில், இலங்கை பயணி தனது செயலுக்கு, வருத்தம் தெரிவித்து, அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டு புகாரை வாபஸ் பெற்றுள்ளாா். இதையடுத்து சுங்க அதிகாரியும் தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.