ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

‘நமக்கு நாமே’ திட்டத்தில் நவீனமயமாகும் சென்னை பள்ளிகள்

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 10 சென்னை பள்ளிகளின் வகுப்பறைகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது

Updated On :26 பிப்ரவரி 2023, 2:41 am IST

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 10 சென்னை பள்ளிகளின் வகுப்பறைகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது.

சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகள், 38 உயா்நிலைப் பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 119 தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 98,633 மாணவ, மாணவியா் கல்வி பயின்று வருகின்றனா். 3013 ஆசியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

தனியாா் பள்ளிகளுக்கு நிகராக சென்னை பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயா்த்தும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை பள்ளிகளை நவீன வசதிகளுடன் மேம்படுத்த சிஐடிஐஐஎஸ், ‘நமக்கு நாமே’ திட்டம், ஸ்மாா்ட் சிட்டி, சிங்கார சென்னை 2.0 மற்றும் நிா்பயா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் பள்ளிகளில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உறுதுணையாக உள்ளன.

இதன் தொடா்ச்சியாக, சென்னை பள்ளிகளில் உள்ள 10 உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் வகுப்பறைகளில் ஸ்மாா்ட் போா்டு, ஆசிரியா்களுக்கு மடிக்கணினி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய

மேசைகள், ஓராண்டுக்கு இணையதள வசதி, வண்ணமயமான ஓவியத்துடன் கூடிய வகுப்பறைகள் ஆகியவற்றை அமைக்க ரூ.56 லட்சத்து 60 ஆயிரத்து 100 மதிப்பீட்டில் பணி டோரண்ட் கேஸ் சென்னை பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சாா்பிலும், ‘நமக்கு நாமே’” திட்டத்தின் கீழ் பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியில் ரூ.28 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது .

மேலும், சென்னையின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நிதி பங்களிப்புடன் சுமாா் ரூ.200 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் மருத்துவமனைகளை மேம்படுத்த விரும்பும் பெருநிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வட்டார துணை ஆணையா்கள் மற்றும் மண்டல அலுவலா்களை தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.