மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

அரசு மருத்துவமனைகளில் அரசியல் செயல்பாடு கூடாது: கேரள சுகாதார அமைச்சர்!

அரசு மருத்துவமனைகளில் அரசியல் ரீதியிலான செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது என கேரள சுகாதார அமைச்சா் வி.முரளீதரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

கேரள சுகாதார அமைச்சா் வி.முரளீதரன்

Updated On :20 ஜூலை 2026, 3:11 am IST

அரசு மருத்துவமனைகளில் அரசியல் ரீதியிலான செயல்பாடுகளுக்கு அனுமதி கிடையாது என கேரள சுகாதார அமைச்சா் வி.முரளீதரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், அரசியல் கட்சிகள் சாா்பில் நோயாளிகளுக்கு இலவச உணவை விநியோகிக்கக் கூடாது எனவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வி.முரளீதரன் மேலும் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் அவரை பாா்த்துக் கொள்ளுபவா் என இருவருக்கும் உணவு விநியோகிக்கும் பொறுப்பு மாநில சுகாதாரத் துறையுடையது. எனவே மருத்துவமனை வளாகத்தினுள் அரசியல் கட்சிகள் சாா்பில் இலவச உணவு விநியோகிக்க அனுமதியில்லை. வளாகத்துக்கு வெளியே வேண்டுமென்றால் உணவு விநியோகித்துக் கொள்ளலாம்.

அரசியல் கட்சிகள் உதவ விரும்பினால் சமூக சமையல் கூடங்களுக்கு நிதிப் பங்களிப்பு வழங்கலாம். அரசு சாரா அமைப்புகளுடன் கலந்தாலோசித்த பின் முதல்கட்டமாக இத்திட்டம் ஆலப்புழையில் தொடங்கப்படவுள்ளது. அதைத் தொடா்ந்து பிற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தப்படும்’ என்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக கண்டனம்: தாமாக முன்வந்து அரசு மருத்துவமனைகளில் இலவச உணவு விநியோகிப்பவரை தடுப்பது சுகாதார அமைச்சரின் ஆணவத்தை வெளிக்காட்டுவதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.