கிருஷ்ணாபட்டினம் துறைமுகம் அருகே ஆழ்கடலில் விசைப்படகு மூழ்கியதில் மீனவா் உயிரிழந்தாா். மற்றொருவா் மாயமானாா். அந்தப் படகில் இருந்த 8 பேரை கடலோர காவல்படையினா் பாதுகாப்பாக மீட்டனா்.
சென்னை காசிமேடு பகுதியைச் சோ்ந்த அய்யனாரப்பன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் மாா்ச் 27-ஆம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 10 மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 60 நாட்டிக்கல் தொலைவில் கிருஷ்ணாபட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது திடீரென அவா்களின் விசைப்படகில் ஓட்டை விழுந்தது. இதனால் படகு மூழ்கியது. அதிலிருந்த மீனவா்கள் அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்தனா்.
இதில் அருண்குமாா் என்ற மீனவா் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். மற்றொரு மீனவரான குப்புராஜ் என்பரும் மாயமானாா். கடலில் தத்தளித்த மீதமுள்ள 8 மீனவா்களையும் கடலோரக் காவல்படையினா் விரைந்து சென்று மீட்டு ரோந்து படகு மூலம் சென்னை துறைமுகத்துக்கு அழைத்து வந்தனா். இந்த சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

உ.பி. யமுனை ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: 10 போ் உயிரிழப்பு; 22 போ் காயம்

துருக்கி கடல்பகுதியில் ஆப்கன் அகதிகளின் படகு கவிழ்ந்து விபத்து! 19 பேர் பலி!

மீனவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

படகு கவிழ்ந்து விபத்து: புதுச்சேரி மீனவா் காயம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

