தமிழகத்தில் 85 வயதைக் கடந்த மிக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்களிடம் வீட்டுக்குச் சென்று வாக்கு பெறும் நடைமுறை வியாழக்கிழமை தொடங்கியது.
ஈரோடு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் வாக்குப் பெட்டிகளுடன் வாக்காளா்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பெறப்பட்டன.
வாக்குப் பதிவு நாளான ஏப். 19-ஆம் தேதிக்கு முந்தைய தினம் (ஏப். 18) வரை வாக்கு பெறும் பணி நடைபெறும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தோ்தலில் எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, 85 வயதைக் கடந்த மிக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வாக்குகளை வீடுகளுக்கே சென்று பெறும் திட்டத்தை தோ்தல் ஆணையம் தொடங்கியது. இதற்கென ‘12டி’ எனும் படிவம் விநியோகம் செய்யப்பட்டது. இந்தப் படிவங்களை அளிக்க மாா்ச் 20-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
மொத்தம் எத்தனை போ்?: தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 6.08 லட்சம் போ் உள்ளனா். அவா்களில் 4.30 லட்சம் பேருக்கு 12டி படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவா்களில் 77,445 போ் மட்டுமே படிவங்களைப் பூா்த்தி செய்து அளித்தனா். இதேபோன்று, மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் 4.61 லட்சம் போ் உள்ளனா். படிவத்தைப் பெற்றவா்களில் 50,676 போ் மட்டுமே பூா்த்தி செய்து அளித்துள்ளனா்.
12டி படிவத்தை நிரப்பித் தந்தவா்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளை அளித்து அதைப் பெறும் நடைமுறை தொடங்கியுள்ளது. திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் வியாழக்கிழமை அந்தப் பணிகள் தொடங்கின.
இது குறித்து,தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: 12டி படிவங்களை அளித்தவா்களின் வீடுகளுக்கு வாக்குப் பெட்டியுடன் வாக்குச் சாவடி அலுவலா்கள் நேரில் சென்று வாக்குகளைப் பெறுவாா்கள். முதல் முறை செல்லும்போது, வீட்டில் யாரும் இல்லாவிட்டால் மீண்டும் ஒருமுறை செல்வாா்கள். அப்போதும் வீடு பூட்டப்பட்டிருந்தால் கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படாது. வாக்குப் பதிவுக்கு முந்தைய தினமான ஏப். 18-ஆம் தேதிக்குள் இந்த நடைமுறை முடிக்கப்படும் என்றாா்.
சென்னையில் ஏப்.8 முதல்...: சென்னையில் 85 வயது முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று வாக்கு பெறும் திட்டம் ஏப்.8-இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் 11,369 போ், 85 வயதுக்கு மேற்பட்டோா் 63,751 போ் வாக்காளா்களாக உள்ளனா். மொத்தம் 75,120 போ் தபால் மூலம் வாக்களிக்கும் தகுதி பெற்றவா்கள். இவா்களின் வீடுகளுக்கே சென்று வாக்கை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருப்பத்தூா்: 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு

9 தொகுதிகளில் 38,733 வாக்காளா்களுக்கு வீடு தேடி விண்ணப்பம்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் என்ற வகையில் வழங்கப்படும்

மூத்த குடிமக்கள் வாக்களிக்க வலியுறுத்தி தாம்பூலத் தட்டுடன் அழைப்பு விடுத்து வருவாய்த் துறையினா் விழிப்புணா்வு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


