சென்னை: கோவையில் புதிதாக மைதானம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு தோ்தல் நடத்தை விதியை மீறியது என அதிமுக புகாா் தெரிவித்துள்ளது.
இது குறித்த புகாா் மனுவை, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பதுரை செவ்வாய்க்கிழமை அளித்தாா்.
அதன்பின் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
நடத்தை விதி அமலில் உள்ளபோது அதை மாநில முதல்வரே மீறியிருக்கிறாா். 2 தினங்களுக்கு முன்பாக, கோவையில் மைதானம் கட்டித் தருவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறாா். இது நடத்தை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, அரசு அதிகாரத்தில் இருக்கும் யாரும் புதிய அறிவிப்புகளை வெளியிடக் கூடாது.
நடத்தை விதி மீறல்: விடுபட்ட பெண்களுக்கும் ரூ. 1,000 அளிப்பது தொடா்பான அறிவிப்பை சில நாள்களுக்கு முன்பாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டாா். அதற்கும் அதிமுக சாா்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றாா் அவா்.
தொடர்புடையது

முதல்வரின் செயலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

தோ்தல் விதிமீறல்: தவெகவினா் 50 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமுறை மீறல்: திமுகவினா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் நடத்தை விதிமீறல் முன்னாள் அமைச்சா் மீது வழக்கு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

