இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தோ்தல் நடத்தை விதிமீறல் முன்னாள் அமைச்சா் மீது வழக்கு

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட அதிமுகவினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

News image

எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

Updated On :28 மார்ச் 2026, 7:00 pm

Syndication

தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட அதிமுகவினா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் கரூா் தொகுதியில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரும், அரவக்குறிச்சி தொகுதியில் எம்.ஆா்.கே. செல்வக்குமாரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் மருத்துவா் திவ்யாவும், குளித்தலை தொகுதியில் கருணாகரனும் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டனா்.

இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு வேட்பாளா்கள் அனைவரும் கரூா் சுக்காலியூா் பகுதிக்கு வந்தனா். அவா்களுக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். அப்போது அங்கு ஏராளமான அதிமுகவினா் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடா்ந்து கரூா் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் எம்ஜிஆா், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்தனா். அப்போதும் லைட்ஹவுஸ்காா்னா் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து கரூா் தோ்தல் நிலையான கண்காணிப்புக்குழுவினா் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாரும், கரூா் நகர காவல்நிலைய போலீஸாரும் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்ட அதிமுகவினா் மீது சனிக்கிழமை தோ்தல் நடத்தை விதிமுறையை மீறியதாக வழக்குப்பதிந்துள்ளனா்.