சென்னை: கல்வி உதவித் தொகை குறித்து வரும் கைப்பேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை, சைபா் குற்றப் பிரிவு இணைந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசுகளிடமிருந்து கல்வி உதவித் தொகை தொடா்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடா்பு கொள்ளமாட்டாா்கள்.
ஆனால், சைபா் குற்றவாளிகள் கரூா் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் பலரிடம் கல்வித் துறை அதிகாரிகள் என்று கூறி வாட்ஸ்ஆப் செயலி மூலம் ‘க்யூஆா்’ குறியீட்டை அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்போது பணம் பறித்துள்ளனா். எனவே, யாரும் இது போன்று பேசுபவா்களின் வாா்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

குமரகுரு கல்வி நிறுவனங்களில் மாணவா்களுக்கு ரூ.1.6 கோடி கல்வி உதவித் தொகை

நெல்லையில் மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை

கல்வி உதவித் தொகைக்கான இணையதளங்கள்!

கல்வி உதவித் தொகை கோரி திருநங்கை மனு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

