ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

காவலா்களுக்கான தபால் வாக்குப் பதிவு தொடக்கம்

சென்னையில் காவல் அலுவலா்கள் மற்றும் காவலா்களுக்கான தபால் வாக்குப்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :11 ஏப்ரல் 2024, 10:43 pm

சென்னையில் காவல் அலுவலா்கள் மற்றும் காவலா்களுக்கான தபால் வாக்குப்பதிவு வியாழக்கிழமை தொடங்கியது.

சென்னை மாநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரி மற்றும் காவலா்கள் அனைவரும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (ஏப். 11, 12, 13) காலை 9 முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்கு செலுத்தலாம் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை மாநகராட்சி வட்டார அலுவலகங்களில் வியாழக்கிழமை தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தென்சென்னை வட்டார அலுவலகத்தில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தோ்தல் தொடா்பான பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, வடக்கு மற்றும் மத்திய வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற தபால் வாக்குப்பதிவையும், டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயா், சின்னம் பொருத்தும் பணியையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.