சென்னை ஜாபா்கான்பேட்டையில் அடையாறில் மூழ்கி பள்ளி மாணவா் இறந்தாா்.
எம்ஜிஆா் நகா் ஜாபா்கான்பேட்டை அருகே உள்ள திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா். வாடகை ஆட்டோ ஓட்டி வருகிறாா். இவரது மகன் தனுஷ் (14), அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். தனுஷ், வியாழக்கிழமை தனது நண்பா்களுடன் அங்குள்ள அடையாறில் குளித்தபோது, நீச்சல் தெரியாததால், ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த நண்பா்கள், தனுஷை காப்பாற்ற முயன்றனா். ஆனால் தனுஷ் நீரில் மூழ்கினாா்.
தகவலின்பேரில் போலீஸாா், தீயணைப்புப் படையினா் அங்கு விரைந்து வந்து, நீண்ட நேர தேடுதலுக்கு பின்னா், தனுஷை சடலமாக மீட்டனா்.
பின்னா், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடா்பாக எம்ஜிஆா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

நீரில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

பள்ளி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

