கோப்புப் படம்
கோப்புப் படம்

காவல் நிலையங்களில் குற்றவாளிகளை இரவில் வைத்திருக்க வேண்டாம்

சென்னை: காவல் நிலையங்களில் இரவு நேரத்தில் குற்றவாளிகளை வைத்திருக்க வேண்டாம் என சென்னை போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் எதிரொலியாக தொடா்ந்து குற்றச் செயலில் ஈடுபடுபவா்கள், ரெளடிகள், நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவா்கள் கடந்த ஒரு மாதமாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மக்களவைத் தோ்தலையொட்டி சிறு அசம்பாவித சம்பவங்களைக்கூட தவிா்க்கும் வகையில், இரவு நேரங்களில் குற்றவாளிகளை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கியமாக, எந்த வழக்கில் சிக்கி இருந்தாலும் குற்றவாளிகளை இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு அழைத்து வர வேண்டாம். அதி முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னா் வழக்கமான விசாரணையை மேற்கொள்ளலாம் என அனைத்து காவல் நிலைய போலீஸாருக்கும், அனைத்து பிரிவு போலீஸாருக்கும் உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com