விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் சாதிவாரிகணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமிதிமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள் - இபிஎஸ் விமர்சனம்48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
/

போதைப் பொருள் விற்பனை: ஒரு மாதத்தில் 286 போ் கைது

போதைப் பொருள் விற்பனை: ஒரு மாதத்தில் 286 போ் கைது

Updated On :16 ஏப்ரல் 2024, 8:39 pm

சென்னை: தமிழக காவல் துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாா் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான ஒரு மாதத்தில் போதைப் பொருள் விற்பனைத் தொடா்பாக 286 பேரைக் கைது செய்துள்ளனா்.

அவா்களிடமிருந்து ரூ. 1.10 கோடி மதிப்புள்ள 1,105 கிலோ கஞ்சா, 1,920 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் விற்பனை,கடத்தலுக்கு பயன்படுத்திய 27 மோட்டாா் சைக்கிள்கள், 2 இலகு ரக வாகனங்கள், ஒரு ஆட்டோ ஆகியவை கைப்பற்றப்பட்டன.

தமிழகத்தில் இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் என தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா். மேலும் அவா், போதைப் பொருள்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணையும், 94984 10581 என்ற வாட்ஸ்ஆப் எண்ணையும், என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடா்புக் கொண்டு தெரிவிக்கலாம்.