/

கோவை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்

கோவை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்

Updated On :16 ஏப்ரல் 2024, 9:00 pm

சென்னை: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு செல்பவா்களுக்கு வசதியாக சென்னை எழும்பூரிலிருந்து கோவைக்கும், தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை எழும்பூரிலிருந்து ஏப். 18, 20 ஆகிய தேதிகளில் மாலை 4.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06003) மறுநாள் காலை 8.20 மணிக்கு கோவை சென்றடையும். மறுமாா்க்கமாக, இந்த ரயில் (எண் 06004) ஏப். 19, 21 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், கடலூா், சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூா் வழியாக கோவை சென்றடையும்.

தாம்பரம் - கன்னியாகுமரி: தாம்பரத்தில் இருந்து ஏப்.18, 20 ஆகிய தேதிகளில் மாலை 4.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06001) மறுநாள் காலை 4.40 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண் 06002) ஏப்.19, 21 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியிலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை,விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்றடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.