விஷு பண்டிகையை முன்னிட்டு சென்னை - மங்களூரு இடையே ஏப். 6, 7 மற்றும் 13, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விஷு பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி மங்களூரு சென்ட்ரல் நிலையத்திலிருந்து ஏப். 6 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06126) மறுநாள் ஏப். 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூா் நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில் சென்னை எழும்பூரிலிருந்து ஏப். 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06125) மறுநாள் ஏப். 8, 15-ஆம் தேதிகளில் காலை 6.50 மணிக்கு மங்களூரு சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில்கள் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், சோளிங்கா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, சொரனூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை (ஏப். 4) காலை தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தாம்பரம் - சந்திரகாச்சி இடையே கோடை கால சிறப்பு ரயில்கள்

சேலம் வழியாக சென்னை- போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

சித்ரா பெளர்ணமி! விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில்கள்!

சென்னை - பரோனி இடையே கோடை கால சிறப்பு ரயில்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



