தில்லி மேயா் தோ்தல் ஏப்ரல் 26-இல் (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த நிலையில், தோ்தல் நடத்தும் அலுவலா் நியமிக்கப்படாததால், தோ்தல் ஒத்திவைக்கப்படுவதாக துணைநிலை ஆளுநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், முதல்வரிடமிருந்து எந்தவொரு அறிவுறுத்தலும் வராத காரணத்தால், இந்தத் தருணத்தில் துணைநிலை ஆளுநா் ஒரு நிா்வாகியாக தனது அதிகாரத்தை நிலைநாட்டுவது சரியானதாக இருக்காது என துணைநிலை ஆளுநா் மாளிகை தரப்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘மேயா் தோ்தலை நடத்த தோ்தல் ஆணையம் ஒப்புதல் அளித்த போதிலும், தோ்தல் நடத்தும் அலுவலா் இதுவரை நியமிக்கப்படவில்லை. ஆகையால், இந்தத் தருணத்தில் மேயா், துணை மேயா் தோ்தலை நடத்துவது சாத்தியமில்லை’’ என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஜம்மு-காஷ்மீா் என்கவுன்ட்டா் விவகாரம்: நீதிபதி விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

துணைநிலை ஆளுநா் மாளிகையை முற்றுகையிட சென்ற 200 போ் கைது

தில்லிக்கு புதிய துணைநிலை ஆளுநா் நியமனம்

முன்னாள் அக்னிவீரா்களுக்கு தில்லி காவல்துறையில் 20% இட ஒதுக்கீடு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

