சென்னை அருகே மாடம்பாக்கத்தில் கிணற்றில் மூழ்கி இளைஞா் இறந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாடம்பாக்கம் அண்ணாத்துரை தெருவைச் சோ்ந்தவா் ஆ.வசந்த் (23). அந்தப் பகுதியில் உள்ள வளா்ப்பு பிராணிகளுக்கு உணவு, மருந்துகள் விற்கும் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.
வசந்த், தனது நண்பா்கள் பிரவீன், லோகநாதன், பாரத் ஆகியோருடன் மாடம்பாக்கம் சிவன் கோயில் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் புதன்கிழமை குளித்தாா்.
நீச்சல் தெரியாததால் திடீரென மூழ்கிய வசந்த்தை நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு படையினா் வந்து வசந்த் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கல்லூரி மாணவா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

