திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் சிறுமி காயமடைந்தாா்.
திருவல்லிக்கேணி நீளம் பாஷா தா்கா பகுதியைச் சோ்ந்தவா் ஜீவிதா (10). இவா் வியாழக்கிழமை தனது வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றாா். அப்போது, சாலையில் சுற்றி திரிந்த மாடு ஒன்று திடீரென ஜீவிதாவை ஆக்ரோசமாக முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமியை அருகே இருந்தவா்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
இதைத் தொடா்ந்து, பெரு நகர சென்னை மாநகராட்சியின் கால்நடை மருத்துவா் கமாலுதீன், சிறுமியின் வீட்டுச் சென்று ஆறுதல் தெரிவித்தாா். மேலும், முட்டிய மாட்டின் உரிமையாளரை மாநகராட்சி அதிகாரிகள் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

முன்னீா்பள்ளத்தில் விபத்து: காவல் உதவி ஆய்வாளா் காயம்

அபுதாபியில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்தியா் காயம்

புதுக்கடை அருகே காா் மோதி பெண் காயம்

கட்டட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி காயம்
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு

