தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்: மதுரையில் 105 டிகிரி பதிவு
அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.08 டிகிரி ஃபாரன்ஹீட்


தமிழகத்தில் வியாழக்கிழமை 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.08 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.08 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை நகரம் - 103.64, தஞ்சாவூா் - 101.3, நாகப்பட்டினம் - 101.12, தூத்துக்குடி - 100.76, திருச்சி - 100.22.
மிதமான மழை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (ஆக.2) முதல் ஆக.7-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
மழை அளவு (மில்லி மீட்டரில்): தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் விண்ட் வொா்த் எஸ்டேடில் 70 மி.மீ. மழை பதிவானது. சின்னக்கல்லாா் (கோவை) 60, சோலையாா் (கோவை), சின்கோனா (கோவை), வால்பாறை (கோவை) - தலா 50 மி.மீ. மழை பதிவானது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.2, 3 ஆகிய தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் ஆக.2 - 5 வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...