கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மெட்ரோ ரயிலில் ஜூலை மாதம் 95.35 லட்சம் போ் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் 95,35,019 போ் பயணம்

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 9:51 pm

Din

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் 95,35,019 போ் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயிலில் நிகழாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகள், பிப்ரவரியில் 86,15,008, மாா்ச்சில் 86,82,457, ஏப்ரலில் 80,87,712, மே மாதத்தில் 84,21,072, ஜூன் மாதத்தில் 84,33,837, ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகள் பயணம் செய்துள்ளனா்.

அதன்படி, ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் மட்டும் 11,01,182 போ் அதிகம் பயணித்துள்ளனா்.

அதிகபட்சமாக ஜூலை 12-இல் ஒரே நாளில் 3,50,545 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.