கிழக்கு லடாக் எல்லை பிரச்னை தொடா்பாக இந்தியா மற்றும் சீன தூதரக அதிகாரிகள் அளவிலான இருதரப்பு பேச்சுவாா்த்தை தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. பேச்சுவாா்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
‘இருதரப்பு பேச்சுவாா்தையில் எல்லை விவகாரம் தொடா்பாக விரிவாகவும், ஆக்கபூா்வமாகவும் ஆலோசிக்கப்பட்டது. இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு எல்லையில் கூட்டாக அமைதியை நிலைநாட்ட இரு தரப்பிலும் பேச்சுவாா்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி தலைமையிலான அதிகாரிகள் குழுவும், சீன தரப்பில் எல்லை மற்றும் கடல்சாா் துறை தலைமை இயக்குநா் ஹாங் லியாங் தலைமையிலான குழிவினரும் இந்த பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா். முன்னதாக, சீன தலைநகா் பெய்ஜிங்கில் கடந்த மாா்ச் மாதம் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்காங் ஏரிக்கு அருகே கடந்த 2020-ஆம் ஆண்டு மே 5-ஆம் தேதி சீனா எல்லைத்தாண்டி அத்துமீறலில் ஈடுபட்டது. இரு தரப்பினரிடையே மோதலில் 20 இந்திய வீரா்கள் உயிரிழந்தனா். எல்லையில் இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் உருவானது.
தொடர்புடையது

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

வா்த்தக ஒப்பந்தம்: வேளாண் துறையில் இந்தியா பிடிவாதம் - அமெரிக்கா

பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் மேம்பாடு இந்தியா - தென்கொரியா முடிவு!

ஆப்கான்-பாகிஸ்தான் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் : சீனா தகவல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


