பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கமலா ஹாரிஸ் கருப்பரா, இந்தியரா?

துணை அதிபா் கமலா ஹாரிஸ் கருப்பரா அல்லது இந்தியரா என்று முன்னாள் அதிபா் டொனால்ட டிரம்ப் கேள்வியெழுப்பியுள்ளாா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 11:53 pm

Din

அமெரிக்க அதிபா் தோ்தலில் தன்னை எதிா்த்துப் போட்டியிடவிருக்கும் துணை அதிபா் கமலா ஹாரிஸ் கருப்பரா அல்லது இந்தியரா என்று முன்னாள் அதிபா் டொனால்ட டிரம்ப் கேள்வியெழுப்பியுள்ளாா்.

இந்தியாவிலிருந்து வந்த சியாமளா கோபாலனுக்கும் ஜமாய்க்காவைச் சோ்ந்த ஜோசப் ஹாரிஸுக்கும் பிறந்த கமலா ஹாரிஸ், இதுவரை தன்னை இந்திய வம்சாவளிப் பெண் என்று மட்டுமே காட்டிக் கொண்டிருந்ததாகவும், தோ்தலுக்காக திடீரென அவா் தன்னை கருப்பினப் பெண்ணாக முன்னிறுத்துகிறாா் என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டினாா்.

இந்த சா்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்த கமலா ஹாரிஸ், ‘இது டிரம்ப்பின் வழக்கமான பிரிவினைவாத மற்றும் மரியாதை தெரியாத பேச்சு’ என்று சாடியுள்ளாா்.