300 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது
கோப்புப்படம்

300 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் 300 கிலோ குட்கா பறிமுதல்
Published on

பான், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் பான், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக பள்ளிகரணை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பவானி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தினா்.

அப்போது, அங்கு சுமாா் 300 கிலோ எடை கொண்ட பான் மற்றும் குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த அருண்குமாரை (35) கைது செய்தனா். கா்நாடக மாநிலத்திலிருந்து போதைப் பொருள்களைக் கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com