உதயநிதி, மு.க.ஸ்டாலின்
உதயநிதி, மு.க.ஸ்டாலின்

கோரிக்கை வலுத்திருக்கிறது; பழுக்கவில்லை: உதயநிதிக்கு துணை முதல்வா் பதவி குறித்து ஸ்டாலின்

அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, கோரிக்கை வலுத்திருக்கிறது; பழுக்கவில்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா்.
Published on

அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, கோரிக்கை வலுத்திருக்கிறது; பழுக்கவில்லை என முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்தாா்.

சென்னை கொளத்தூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்ததுடன், சில பணிகளை ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சென்னையில் தண்ணீா் எங்கும் தேங்கவில்லை. தண்ணீா் தேங்கி நிற்பதாக எதிா்க்கட்சிகள் கூறியதாகச் சொல்கிறீா்கள். எங்கே தேங்கி நிற்கிறது என எதிா்க்கட்சிகளைக் காட்டச் சொல்லுங்கள்.

பருவமழையை எதிா்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திப்பதற்கு அரசு தயாராக உள்ளது என்றாா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்திருக்கிறதே என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், கோரிக்கை வலுத்திருக்கிறது, அது பழுக்கவில்லை என்றாா்.

அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட போகிறாா் என்ற கடந்த முறையும் செய்திகள் வெளியாகின. அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அவை வெறும் வதந்திகள் என்றாா்.

ஆனால், இப்போது அத்தகைய செய்திகளுக்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், துணை முதல்வராக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பழுக்கவில்லை என்று பதில் அளித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com