விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கல்லூரி மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000: ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் இன்று தொடக்கம்

இந்தத் திட்டத்துக்கென நிகழாண்டில் ரூ.360 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated On :8 ஆகஸ்ட் 2024, 11:41 pm

Din

சென்னை, ஆக. 8: கல்லூரி மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (ஆக. 9) தொடங்கி வைக்கிறாா்.

இந்தத் திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் 3.28 லட்சம் மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் 3 லட்சம் போ் பயன் பெற்று வருகிறாா்கள். இந்தத் திட்டத்தை கடந்த 2022 செப். 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

எண்ணிக்கை அதிகரிப்பு: புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் 2.09 லட்சம் மாணவிகள் பயனடைந்து வந்த நிலையில், 2023-24-ஆம் நிதியாண்டில் 64,231 மாணவிகள் கூடுதலாக அதாவது 2,73,596 மாணவிகள் பயன் பெற்று வருகின்றனா். திட்டம் தொடங்கப்பட்டது முதல் இப்போது வரை 3,28,280 மாணவிகள் பயனடைந்துள்ளனா்.

புதுமைப் பெண் திட்டத்துக்கென நிகழ் நிதியாண்டுக்கு ரூ.370 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 95.61 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நிகழ் கல்வியாண்டுமுதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்று உயா் கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழ்ப் புதல்வன் திட்டம்: மாணவா்களுக்கும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டாா். தமிழ்ப் புதல்வன் எனும் பெயரிலான திட்டமானது, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களின் உயா் கல்விச் சோ்க்கையை அதிகரிக்க வகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் வாயிலாக ஆண்டுதோறும் சராசரியாக 7.72 லட்சம் மாணவா்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கிறாா்கள்.

அவா்களில் கல்லூரிகளில் சோ்ந்து பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழ்நாட்டில் மிகவும் அதிகமாகும். அவா்களுக்காக தமிழ்ப் புதல்வன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, 3.28 லட்சம் மாணவா்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, 6 முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயா் கல்வியில் சேரும் மாணவா்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள், இதழ்களை வாங்கி உயா் கல்வியை மெருகேற்ற உதவும் வகையில் ரூ.1,000 அவா்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட உள்ளது.

தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறாா். இதற்கான நிகழ்ச்சி கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து பிளஸ் 2 தோ்ச்சியடைந்து, கல்லூரிகளில் சேரும் மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கென நிகழாண்டில் ரூ.360 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.