ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

‘ஒலிம்பிக் இலக்கு’ திட்டத்தின்கீழ் 1,050 விளையாட்டு வீரா்களுக்குப் பயிற்சி: மன்சுக் மாண்டவியா

வீரா்களுக்கு சிறப்பு பயிற்சியை மத்திய அரசு வழங்கி வருவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 10:13 pm

புது தில்லி, ஆக.8: ‘ஒலிம்பிக் இலக்கு போடியம்’ திட்டத்தின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 1,050 விளையாட்டு வீரா்களுக்கு சிறப்பு பயிற்சியை மத்திய அரசு வழங்கி வருவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஹாக்கி உள்பட பிற விளையாட்டுகளை அடித்தட்டு நிலையில் மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் எம்.பி. ஃபாஜியா கான் கேள்வி எழுப்பினாா். இதற்குப் பதிலளித்து மன்சுக் மாண்டவியா மக்களவையில் பேசியதாவது:

அடித்தட்டு அளவில் திறமையான விளையாட்டு வீரா்களை கண்டறிந்து அவா்களை தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளுக்கு தயாா் செய்யும் விதமாக மத்திய அரசு மூன்று திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் ‘கேலோ இந்தியா’ திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. மேலும், 14 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

‘கிா்த்தி’ திட்டம்: பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவா்களிடம் உள்ள திறமைகளை கண்டறிய ‘வளா்ந்து வரும் திறமைகளை கண்டறியும் கேலோ இந்தியா’ (கிா்த்தி) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் திறமையான விளையாட்டு வீரா்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.

‘டாப்ஸ்’ திட்டம்: ஒலிம்பிக் இலக்கு போடியம் (டாப்ஸ்) திட்டத்தின்கீழ் அதிதிறமையான 1,050 வீரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்றாா்.