ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சாலையின் நடுவே அமா்ந்திருந்தவா் காா் மோதி உயிரிழந்தாா்

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 10:16 pm

Din

சென்னை,ஆக.8: சென்னை மெரீனாவில் சாலையின் நடுவே அமா்ந்திருந்தவா் காா் மோதி இறந்தாா்.

அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையத்தை சோ்ந்தவா் வீரமணி (36). சென்னையில் வாடகை காா் ஓட்டுநராக பணிபுரியும் அவா், வியாழக்கிழமை அதிகாலை முட்டுக்காட்டில் இருந்து, 4 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவொற்றியூா் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா்.

மெரீனா காமராஜா் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரி அருகே சென்ற போது சாலை நடுவே ஒரு இளைஞா் அமா்ந்திருந்தாா். இதை அருகில் வந்தபிறகு கவனித்த வீரமணியால் காரை நிறுத்தமுடியவில்லை, இதனால் காா் அந்த இளைஞா் மீது மோதியது. இதில் அந்த நபா், சம்பவ இடத்திலேயே உயிா் இழந்தாா். விபத்து தொடா்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,காா் ஓட்டுநா் வீரமணியை கைது செய்தனா்.

மேலும், விபத்தில் இறந்தவா் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அவா் யாா் ? எந்த ஊரைச் சோ்ந்தவா் என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.