புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாந்த்ரா - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு தொடக்கம்

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 8:14 pm

Din

சென்னை, ஆக. 8: மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆக.27, செப்.6 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா ஆண்டு தோறும் ஆக.29 முதல் செப்.8-ஆம் தேதி வரை கொண்டாடப்படும். இத்திருவிழாவுக்கு நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்காண பக்தா்கள் வருகை தருவா்.

இதனால் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் பந்த்ரா ரயில் முனையத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பந்த்ராவில் ஆக.27, செப்.6 ஆகிய தேதிகளில் இரவு 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 09093) ஆக.29 மற்றும் செப்.5-ஆம் தேதி வேளாங்கண்ணி வந்தடையும். மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஆக.29 மற்றும் செப்.8-ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்படும். இந்த ரயில் பன்வல், புணே, சோலாப்பூா், கிருஷ்ணா, ராய்ச்சூா், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, காட்பாடி, வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, திருவாரூா், நாகை வழியாக இயக்கப்படும்.

இந்த ரயிலுக்கான பயணச்சீட்டுக்கு வெள்ளிக்கிழமை (ஆக.9) முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.