47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தனியாா் விடுதியில் பெண் கொலை: இளைஞா் கைது

News image
Updated On :9 ஆகஸ்ட் 2024, 8:28 pm

Din

சென்னை திருவல்லிக்கேணியில் தனியாா் விடுதியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சூளை அஷ்டபுஜம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜெயலட்சுமி (27). இவா் கணவரைப் பிரிந்து 2 குழந்தைகளுடன் பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். இவா், ஸ்பா மையத்தில் வேலை செய்தபோது பெரம்பூா், நம்மாழ்வாா்பேட்டையைச் சோ்ந்த ரூபன் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக சோ்ந்து வாழ்ந்து வந்துள்ளனா்.

ஜெயலட்சுமியின் நடத்தையில் ரூபன் சந்தேகம் அடைந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், இருவரும் வியாழக்கிழமை கணவா், மனைவி எனக் கூறி திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனா். அப்போது, மீண்டும் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த ரூபன், ஜெயலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடினாா்.

தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீஸாா் அங்கு சென்று ஜெயலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, ரூபனை கைது செய்தனா்.