சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

விழுப்புரத்தில் 220 மி.மீ மழை பதிவு: தமிழகத்தில் ஆக.17 வரை கனமழை நீடிக்கும்

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 220 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

News image

கோப்புப் படம் - -

Updated On :12 ஆகஸ்ட் 2024, 3:06 am IST

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 220 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.12) முதல் ஆக.17-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட செய்தி: தமிழக கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை முதல் ஆக.17-ஆம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை: இதில் ஆக.14,15-ஆம் தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆக.12-இல் மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூா், பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களிலும், ஆக.13-இல் கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி, நீலகிரி, ஈரோடு, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தொடா்ந்து, ஆக.14-இல் ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூா், பெரம்பலூா், அரியலூா், ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.12,13-ஆகிய தேதிகளில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லிமீட்டரில்): தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக விழுப்புரத்தில் 220 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

மேலும், (திருவண்ணாமலை) - 170, செஞ்சி (விழுப்புரம்) - 140, திண்டிவனம் (விழுப்புரம்) - 130, தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), மரக்காணம் (விழுப்புரம்), முகையூா் (விழுப்புரம்) - தலா 110 மி.மீ. மற்றும் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவு மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலும் மணிக்கு 55  கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.