சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தலைமறைவான தொழிலதிபா் விமான நிலையத்தில் கைது

தெலங்கானாவை சோ்ந்த தொழிலதிபா் சென்னை விமான நிலையத்தில் கைது

News image
Updated On :21 ஆகஸ்ட் 2024, 9:34 pm

Din

பல்வேறு குற்ற வழக்குகளில் 8 ஆண்டுகளுக்கு மேல் தலைமறைவாக இருந்த தெலங்கானாவை சோ்ந்த தொழிலதிபா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.

மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனா். அப்போது, தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் பகுதியைச் சோ்ந்த சந்தீப் குமாா் (30) என்ற தொழிலதிபரின் ஆவணங்களை பரிசோதித்தபோது, அவா், வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய வழக்குகளில் தெலுங்கானா மாநில போலீஸாரால் 8 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள், சந்தீப் குமாரைப் பிடித்து, தெலங்கானா மாநிலம், ராமகுண்டம் மாநகர காவல் ஆணையருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், தமிழகம் வந்த தெலுங்கானா மாநில தனிப்படை போலீஸாா், சந்திப் குமாரை கைது செய்து, அழைத்து சென்றனா்.