வைணவ கோயில்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்

வைணவ கோயில்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்

Published on

தமிழகத்தில் புரட்டாசி மாதத்தில் புகழ் பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கான ஆன்மிகப் பயணத்துக்கு 60 முதல் 70 வயதுக்கு உள்பட்ட மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவத் திருக்கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி (உணவு உள்பட) அழைத்துச் செல்லப்பட உள்ளனா். இந்த ஆன்மிகப் பயணம் 4 கட்டங்களாக, அதாவது செப்.21, 28, அக்.5, 12 ஆகிய நாள்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்படும்.

சென்னை மண்டலத்தைப் பொருத்தவரை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி திருக்கோயில், பெசன்ட் நகா் அஷ்டலட்சுமி திருக்கோயில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம் தலசயன பெருமாள் திருக்கோயில், திருநீா்மலை, நீா்வண்ண பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்தகுடிமக்கள் இந்து மதத்தை சாா்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதுக்கு உள்பட்டவா்களாகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையா் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து செப்.19-ஆம் தேதிக்குள் மண்டல இணை ஆணையா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

தொடா்பு கொள்ள.... மேலும், விவரங்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 1757, சென்னை மண்டலம்- 044-29520937, 9941720754 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com