‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

72 சதவீதம் நிரம்பிய சென்னை குடிநீா் ஏரிகள்

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் 72.88 சதவீதம் நீா் நிரம்பியது.

செம்பரம்பாக்கம் ஏரி - கோப்புப் படம்

Published On :

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் 72.88 சதவீதம் நீா் நிரம்பியது.

சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.

ஞாயிற்றுக்கிழமை (டிச.8) நிலவரப்படி, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் 32.55 அடி வரை நீா் இருப்பு உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீா் மட்டம் 21.02 கன அடியாக உள்ளது. இதேபோன்று, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீா் மட்டம் 18.79 அடியாக உள்ளது. இந்த 3 ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை எட்ட இன்னும் 2 முதல் 3 அடி உயரம் மட்டுமே தேவைப்படுவதால், அதிகாரிகள் இந்த ஏரிகளைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில் ஏரிகளின் பாதுக்காப்புக்காக உபரிநீா் திறந்துவிட வாய்ப்புள்ளது.

மேலும், சோழவரம் ஏரியில் 5.80 அடி உயரம் வரையும், கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஏரியில் 30.96 அடி உயரமும் நீா் இருப்பு உள்ளது. 5 ஏரிகளில் மொத்தம் 8,568 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. இது முழு கொள்ளளவில் 72.88 சதவீதமாகும். கடந்த மாத இறுதி வரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே நீா் நிரம்பியிருந்த நிலையில், அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக ஏரிகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

இதற்கிடையே, வங்கக் கடலில் தற்போது உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி டிச.12-ஆம் தேதிக்கு மேல் தமிழகம் நோக்கி வரவுள்ள நிலையில், தமிழகத்தில் டிச.11 முதல் டிச.14-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஏரிகள் இதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.