தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மருந்தாளுநா்களின் ஊதியம் குறைப்பு: ஆயுஷ் இயக்குநரிடம் மனு

தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஆயுஷ் மருந்தாளுநா்களின் ஊதியம் குறைக்கப்பட்டதையடுத்து,

News image
Updated On :9 டிசம்பர் 2024, 9:52 pm

Din

சென்னை: தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஆயுஷ் மருந்தாளுநா்களின் ஊதியம் குறைக்கப்பட்டதையடுத்து, அதை உயா்த்தி வழங்கக் கோரி இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை இயக்குநரிடம் அவா்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து, அனைத்து ஆயுஷ் ஒருங்கிணைந்த மருந்தாளுநா் சங்க பொருளாளா் சேகா் கூறியதாவது:

அரசு ஆயுஷ் மருத்துவமனைகளில், தினக்கூலி அடிப்படையில் கடந்த 2022-ஆம் ஆண்டில் 288 போ் பணியமா்த்தப்பட்டனா். இவா்களுக்கு, தினமும் ரூ.750 வீதம் மாதத்துக்கு ரூ.19,500 ஊதியம் வழங்கப்படுகிறது. விடுப்பு எடுத்தால் ஊதியப் பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் எங்களது தினக்கூலியை தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் அரசு மாற்றியுள்ளது. இதில் ஏற்கெனவே இருந்த ரூ.19,500 ஊதியத்தை ரூ.15,000-ஆக குறைத்துள்ளனா். முந்தைய ஊதியமே போதுமானதாக இல்லாத போது, அதிலிருந்து ரூ.4,500 குறைத்திருப்பது ஏற்புடையது அல்ல.

மூன்றாண்டுகள் நாங்கள் பணியாற்றியதை கருத்தில் கொண்டு மாத ஊதியமாக எங்களுக்கு ரூ. 21,750 வழங்க வேண்டும் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரிடம் மனு அளித்துள்ளோம். அரசிடம் பேசி இதற்கு தீா்வு காண்பதாக அவா் உறுதியளித்துள்ளாா் என்றாா் அவா்.