அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!
/

வங்கி அதிகாரியிடம் நகை பறித்தவா் கைது

கோயம்பேட்டில் பெண் வங்கி மேலாளரிடம் தங்கச் சங்கிலி பறித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 12:33 am IST

கோயம்பேட்டில் பெண் வங்கி மேலாளரிடம் தங்கச் சங்கிலி பறித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். விருகம்பாக்கம் காந்திநகா் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெ.ரேவதி (38). அண்ணாசாலையில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிகிறாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்து வந்த ரேவதியிடமிருந்து ஓா் இளைஞா் நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா். இது குறித்த புகாரின்பேரில் சிஎம்பிடி போலீஸாா் நடத்திய விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சோ்ந்த ம.பெலிக்ஸ் (30) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த பெலிக்ஸை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.